இங்கிலாந்திலும் ஒரு பி.எஸ்.பி.பி. ராஜகோபால் வாத்தியார்!

இங்கிலாந்தின் ஆஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் டீன் டேவிட்சன் (வயது 38). ஆசிரியரான இவர், ஆன்லைனில் பதின்பருவ மாணவர்களுடன் உரையாடுவதை வாடிக்கையாக கொண்டவர். அப்போது, மாணவர்களிடம் ஆபாசமாக பேசுவதுடன், அவர்களது நிர்வாணப் படத்தை பெற்று அதன் மூலம் சல்லாபம் தேடிவந்தார். இதுதவிர வகுப்பறைகளிலும் மாணவர்களை ஒழுங்கீனமான முறையில் தொட்டு தடவி வந்தார்.

இந்தக் கொடிய செயலில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஈடுபட்டு வந்தார் டேவிட்சன். இது ஒருவழியாக காவல் துறையினரின் கவனத்துக்கு வரவே, பொறிவைத்து அவரை கைது செய்தனர் போலீசார்.

இந்த வழக்கை விசாரித்த நியூகாஸ்டில் கிரவுண் நீதிமன்றம், விசாரணை நிறைவில் டேவிட்சனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

nine − 8 =