பள்ளி குழந்தைகளுக்கு நிதி திரட்ட சைக்கிள் பேரணி

கெடுதல் விளைவிக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் நகரிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது ஷோ லோ. இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஷோ லோ முதல் அரிசோனா வரை 93 கிமீ தூரத்துக்கு சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த வேன், பேரணிக்குள் புகுந்து 6 பேர் மீது மோதியது. இதனால், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட வேனை விடாமல் பின்தொடர்ந்த காவல் துறையினர், வேன் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

nineteen − 6 =