பெண் ஆலோசகருக்கு முத்தம் கொடுத்த விவகாரம்

வருத்தம் தெரிவித்தார் சுகாதாரத் துறை அமைச்சர்

இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக்கும், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் கினே என்ற பெண் ஆலோசகரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அதிலும், அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டது அரசியலில் புயலை கிளப்பியது. எனவே, தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்திய மேத்யூ ஹான்காக்கை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில், தனது செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

fourteen − 14 =