கொலம்பியாவில் கொலம்பஸ் சிலையை தகர்த்தெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

லத்தீன் அமெரிக்க நாடான கொம்பியாவில் சமூக சீர்திருத்தம் கோரி, ஒருசாரார் கடந்த 2 மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலம்பியாவின் கடற்கரை நகரான பாரன்கியூலாவில் நிறுவப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையை போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அமெரிக்காவை கண்டறிந்தவராக கொலம்பஸ் திகழ்ந்தாலும், அவரது சிலை காலனி ஆதிக்கத்துக்கும், அடக்குமுறைக்கும் சின்னமாக திகழ்வதாகக் கூறி, இந்த சிலை தகர்ப்பு நடவடிக்கையை அவர்கள் கையாண்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த பாரன்கியூலா மேயர், தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

twelve + 19 =