இன்று உலகம் முழுவதும் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது.
சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, பாஜக சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings