தேர்தல் தோல்வி எதிரொலி தொழிலாளர் கட்சி துணைத் தலைவர் ஏஞ்சலோ ரேய்னரின் பொறுப்புகள் பறிப்பு

 

 

இங்கிலாந்தின் பெரும்பாலான கவுன்சில்களிலும், மேயர் தேர்தலிலும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக 47 ஆண்டுகள் அக்கட்சி வசமிருந்த ஹார்டில்பூல் எம்பி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இழந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தொழிலாளர் துணைத் தலைவர் ஏஞ்சலோ ரேய்னரின் வசமிருந்த தேசிய பிரசாரக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் சர் கெயிர் ஸ்டார்மர் வெளியிட்டார். அதேவேளையில், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு அவர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அப்பதவி தப்பியது.

கெயிர் ஸ்டார்மரின் இந்த நடவடிக்கைக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர் ஜான் மெக்டொனால்ட் கூறுகையில், ஹார்டில்பூல் உள்ளிட்ட இடங்களில் தொழிலாளர் கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்பதாக கெயிர் ஸ்டார்மர் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால், இன்று அவருக்கு பதிலாக மற்ற அனைவரையும் தோல்விக்கு பலிகடா ஆக்குகிறார். இது தலைமைப் பண்புக்கு அழகு அல்ல. பொறுப்புகளை கோழைத்தனமாக தவிர்க்கும் செயல் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

12 − 9 =