ஜெர்மனி அதிபர் அடுத்த வாரம் பிரிட்டன் வருகை

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) பிரிட்டன் வருகிறார். பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திக்கும் அவர், பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய இருதரப்பு உறவு, கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கிறார். இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோபிடனையும் சந்தித்து பேச ஏஞ்சலா மெர்கெல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டனிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, தனிமைப்படுத்துங்கள் என ஜெர்மனி பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசிய அடுத்த சில நாள்களிலேயே பிரதமர் போரிஸ் ஜான்சனை அவர் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

eighteen − 3 =