மனைவியை விவாகரத்து செய்தார் அமீர்கான்

 

தனது அசாத்திய நடிப்புத் திறமையால் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். இவர் தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக நேற்று வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்த 15 ஆண்டுகால இல்லற வாழ்க்கையிலும் வாழ்நாள் அனுபவங்களையும், சந்தோஷத்தையும், சிரிப்பையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம் என்று கூறிய அவர்கள், கணவன்- மனைவியாக இல்லாவிட்டாலும், தங்கள் மகனின் எதிர்காலம் கருதி அவனை இருவரும் இணைந்தே பராமரிப்போம் என்று கூறியுள்ளனர்.

அத்துடன் எங்கள் உறவு உண்மை, கண்ணியம், அன்பையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர் .56 வயதான நடிகர் அமீர்கானும் , 47 வயது கிசான் ராவும் கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு பதினோரு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நடிகர் அமீர்கான் ஏற்கனவே என்பவரை திருமணம் செய்து கடந்த 2001 இல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

13 − 6 =