அமெரிக்க எம்.பி. டுவிட்டர் கணக்கு முடக்கம்

மெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. மர்ஜோரி டைலர் கிரீனி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா போரில் தடுப்பூசி பலனளிக்காது. 65 வயதுக்கு உட்பட்ட உடல் பருமன் இல்லாதவர்களுக்கு கொரோனாவால் எந்தவித ஆபத்தும் இல்லை என கருத்து தெரிவித்திருந்தார். உலகமே பெருந்தொற்றுக்கு எதிராக போரிடும் நிலையில், எம்.பி.யே இவ்வாறு கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, அவரது கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. தற்போது எம்.பி. மர்ஜோரி டைலர் கிரீனியால் எந்த பதிவும் போட முடியாத அளவுக்கு அது ரீடிங் மோடில் உள்ளது.

Add your comment

Your email address will not be published.

twenty + ten =