உயிர்காக்கும் ஊழியர் உயிரிழந்த பரிதாபம்!

ஹெர்போர்டுஷிர் மோர்டன் சாலையில் கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அழைப்பை ஏற்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மர்மபொருள் ஒன்று ஆம்புலன்ஸின்முன்பக்க கண்ணாடியில் மோதியது. இதில், ஆம்புலன்ஸின் முன்பக்கம் அமர்ந்திருந்த 66 வயது ஊழியர் ஜேக், சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். விபத்துக்கு காரணமான மர்ம பொருள் குறித்த விவரம் தெரியவரவில்லை. எனவே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளவர்கள் தங்களை 101 என்ற எண்ணில் அணுகுமாறு வெஸ்ட் மெர்சியா காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். உயிர்காக்கும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =