in

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதம்


Watch – YouTube Click

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதம்

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நோயாளிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைகளத்தில் வைரல்.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு விருதுநகர் மட்டும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் அருப்புக்கோட்டை,
சாத்தூர் சிவகாசி , திருச்சுழி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களிலோ அல்லது அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களிலோ வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்புவதற்கு அரசு ஆம்புலன்ஸ் தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான நேரங்களில் இலவச ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இல்லை என்ற நிலை உள்ளதாகவும் மாறாக ஊழியர்கள் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் பல்வேறு நோயாளிகள் சிரமப்படுவதாகவும் பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் நோயாளிகளை அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறு இரண்டு பேர் கடும் சண்டையிடும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதே போன்ற நிலை அடிக்கடி நிலவுவதாகவும் கூடுதலாக ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசியில் ரூ.9 கோடி வரி பாக்கி; வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்த தங்க தேர்