பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குகிறது அமேசான்

 

பிரிட்டனில் இந்த ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பெருநிறுவனங்களே முடங்கிய நிலையில், ஆன்லைன் வர்த்தகம் தங்குதடையின்றி நடைபெறுகிறது. கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியிடங்களுக்கு சென்று அலைந்து திரிந்து பொருள்கள் வாங்குவதை விட ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தேவையான பொருள்களை வாங்குகின்றனர். இதனால், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம், இந்த பெருந்தொற்று காலத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக இங்கிலாந்து வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் பண்டகசாலைகளை (வேர்ஹவுஸ்) அமைக்க திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், இதன்மூலம் பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இதுதவிர கேம்பிரிட்ஜ், எடின்பரோ, லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கார்பரேட் அலுவலகத்தை திறக்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அந்நிறுவனத்தின் வணிகப் பிரிவு செயலாளர் குவாசி குவார்டெங்க், பெருந்தொற்று காலத்தில் அமேசான் நிறுவனத்தின் விற்பனை பலமடங்கு உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும்பட்சத்தில், அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

fifteen + eleven =