தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி

 

ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

 

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளையும், கரோனா முற்றிலும் இல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் வரவேற்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை காலம் நெருங்குவதையொட்டி, இந்த முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்திருக்கிறது. ஆனாலும், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பைசர், மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன், அஸ்ட்ராஜெனிகா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அனுமதி அளிக்கப்படும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் எந்தெந்த நாடுகள் இந்த புதிய வழிமுறைகளை ஏற்று சர்வதேச பயணிகளுக்கு தங்கள் நாட்டின் எல்லைகளை திறந்து கொடுக்கும் என்ற விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும், இந்த புதிய விதிமுறைகள் அடுத்த வாரமே நடைமுறைக்கு வரும் என்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen + six =