பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் அகில இந்திய மாநில கருத்தரங்கு
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் அகில இந்திய சமுதாய மருத்துவ துறையின் புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கு.
புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அகில இந்திய சமுதாய மருத்துவ துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கிட துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் டெல்லி எக்கோ இந்தியா அமைப்பின் பேராசிரியர் சந்தீப் பல்லா பேசுகையில், மருத்துவ துறை மேம்பாட்டில் எக்கோ இந்தியாவின் பங்கு குறித்து விரிவாக உரையாற்றி தொற்றா நோய் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை வெளியிட டாக்டர் அனில் பூர்த்தி பெற்றுக் கொண்டார்.
பின்னர் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி சமுதாய மருத்துவர் டாக்டர் கவிதா பேசும் போது தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு சமுதாயம் சார்ந்த அளிக்க வேண்டிய சிகிச்சை முறை குறித்து விளக்கினார்.
தொடர்ந்து இருதய நிபுணர் டாக்டர் மார்க் “மாரடைப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதல் உதவி சிகிச்சை குறித்தும்,”ஜிப்மர் மருத்துவமனை மன நல மருத்துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய் குறித்தும் அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.
காணொலி மூலம் டாட்டா மெமோரியல் மருத்துவ பேராசிரியர்
சுபிதா பாட்டீல் புற்றுநோய் ஆரம்ப நிலை குறித்தும் சிகிச்சைக்கான பொது மக்களுக்கு விழிப்புணர்வு குறித்த விபரங்களை தந்து மருத்துவ மாணவ மாணவியர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தொற்றா நோய் குறித்த மருத்துவ மாணவ மாணவிகள் பங்கு பெறும் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை காலை கடற்கரை சாலையில் நடைபெறுகிறது.
பின்னர் இளங்கலை மருத்துவ மாணவ மாணவிகளுக்கு தொற்றாநோய் குறித்து குறும் படம் மற்றும் விளக்கப்பட போட்டிகள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவ மாணவிகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான விளக்க உரை குறித்த போட்டிகள் நடைபெறுகிறது.
கருத்தரங்கில் பிம்ஸ் மருத்துவ சமுதாய மருத்துவர் டாக்டர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கல்லூரி மருத்துவ நிபுணர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.