தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: முகாமை ரத்து செய்தது ஏர் இந்தியா

 

பெருகிவரும் கரோனா தொற்று காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இதில் விமானிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அதன்படி, மே 11 மற்றும் மே 13 ஆகிய தினங்களில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், இந்த முகாம் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

13 − 11 =