திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷம்
கடலூர் மாவட்டம் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ‘ உள்ள 1700 வருடங்கள் பழமை வாய்ந்த அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஐப்பசி மாதத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
நந்தி தேவிக்கும் பாடலீஸ்வரருக்கும் இன்று பால் மஞ்சள் தயிர் -சந்தனம் பன்னீர் பழங்கள் தேன் கரும்பு சாறு இளநீர் விபூதி அபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் .செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில். பின்னர் மகா அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது மகாதீபாரதனை யொட்டி ஏராளமான பக்தர்கள் நந்திதேவியையும் பாடலீஸ்வரர் ஜையும் வழிபாடு செய்தனர்.