லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கருப்பின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

உலகின் தலைசிறந்த உயரிய அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில், இளம் அறிவியல் பிரிவில் கருப்பின மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்க 5 மில்லியன் பவுண்ட் ஊக்கத்தொகை வழங்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்கு பயிலும் 10 ஆயிரம் மாணவர்களில் 235 பேர் மட்டுமே கருப்பின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் ஊக்கத்தொகை அல்லது கல்வி கட்டண சலுகை வழங்க முடிவு செய்த கல்லூரி நிர்வாகம், இத்தொகையை நன்கொடை வாயிலாக திரட்ட திட்டமிட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

1 × four =