பாலியல் வன்புணர்வுக்கு பின் ‘காட் பிளஸ் யூ’ சொன்ன போதகர்!

 

நீதிமன்றத்தில் பெண் வாக்குமூலம்

 

இங்கிலாந்தின் வடக்கு யோர்க்ஷிர், பிலியில் உள்ள செயின்ட் மேரிஸ் பிரையரி தேவாலயத்தின் போதகர் ஜான் ஆன்டனி. 72 வயதாகும் இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கேட்ஷெட்டில் உள்ள தேவாலயத்தில் போதகராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில், பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நிதியுதவி அளிக்கக் கோரி, டயோசிஷனில் முறையிட்டார். ஆயினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றத்துக்குள்ளான அவர், நியூ காஸ்டில் நீதிமன்றக் கதவை தட்டினார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறையிடம் அவர் அளித்த வாக்குமூலம் அடங்கிய குரல் பதிவு நீதிபதி முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதில், அந்த பெண் கூறியிருப்பதாவது;

1986ஆம் ஆண்டில் கேட்ஷெட் தேவாலயத்துக்கு பணியிட மாறுதலில் வந்த போதகர் ஜான் ஆன்டனி, என்னை சந்திக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், என்னிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டுமென கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

பின்னர், எந்தவித பதற்றமோ, பதைபதைப்போ இன்றி, மிகவும் கூலாக கடந்து சென்றார். அப்போது, ”குட் நைட், காட் பிளஷ் யூ” என்று என்னை வாழ்த்திவிட்டு வேறு சென்றார். போதகரின் இந்த செயலால் நான் மிகவும் பாதிப்புக்குள்ளானேன் என்று வாக்குமூலத்தில் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதகர் ஆன்டனி, இருவரும் பரஸ்பர சம்மதத்தின்பேரிலேயே கட்டித்தழுவியதாக குறிப்பிட்டார். வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

four − 1 =