ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமானங்களில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறி, பிரிட்டனில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
அவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் பிரிட்டனில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த அகதிகள் ஹோட்டலில் இருந்து வெளியேற வேண்டும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு பிரிட்டனில் நிரந்தரமாக வீடு கட்டிக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜானி மெர்சர் கூறியுள்ளார். மேலும் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அகதிகளுக்கு மூன்று மாதம் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்த லேபர் கட்சி, அகதிகளுக்கு எந்த ஒரு வீடும் ஏற்பாடு செய்யாமல் நோட்டீஸ் அனுப்புவது சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்தது.
GIPHY App Key not set. Please check settings