அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு

 

 

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

 

தேனி போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் முதலில் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மிக குறைவான வாக்கு இடைவெளியில் முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில், அதிமுக அமைச்சர்கள் ஆர். காமராஜ் (நன்னிலம்), மா.பா. பாண்டியராஜன் (ஆவடி), ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்), பெஞ்சமின் (மதுரவாயல்), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு), சி.வி. சண்முகம் (விழுப்புரம்), ஜெயக்குமார் (ராயபுரம்), ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

15 + 14 =