பெண்களை விபசாரத்தில் தள்ளிய அமெரிக்க நடிகைக்கு சிறை தண்டனை

அமெரிக்காவில் நிக்ஸிவம் என்ற அமைப்பு இளம்பெண்களை குறிவைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. இது கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியுலகுக்கு தெரியவந்து அதிர்வலையை ஏற்படுத்தியது. எனவே, இந்நிறுவனத்தின் நிர்வாகி கேத் ரேனியருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இந்த விபசாரத் தொழிலில் பிரபல நடிகை அல்லிசன் மேக்குக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தி அதன்மூலம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. எனவே, நடிகை அல்லிசன் மேக்குக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Add your comment

Your email address will not be published.

5 × 5 =