கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு

புதிய சட்டத்துக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஆளுநர் ஒப்புதல்

கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் வருகிற செப்டம்பரில் நடைமுறைக்கு வருகிறது. கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், மருத்துவ அவசர நிலை போன்ற சூழலில், பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்பட்சத்தில், கருக்கலைப்புக்கு அனுமதியளிக்க இந்த சட்டம் வழிகோலுகிறது.
இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், நாம் உலக வாழ்வை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கடவுள் நம்மை படைக்கிறார். ஆனால், ஏராளமான சிசுக்கள், கருக்கலைப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துவிடுகின்றன. இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

ten + 11 =