in

பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்த தங்க தேர்


Watch – YouTube Click

பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்த தங்க தேர்

 

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் தங்க தேர் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் .

இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்று .

இந்நிலையில் திருக்கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற தங்க தேர் உருவாக்கப்பட்டு பக்தர்கள் வேண்டுதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருத்தேரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கடந்த நான்கு வருடங்களாக பக்தர்கள் பயன்பாட்டின்றி இருந்து வந்தது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தவுடன் திருத்தேர் புனரமைக்கும் பணியானது ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட திருத்தேரானது திருக்கோயில் வளாகத்தில் தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மாட வீதியில் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தர் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்கள்.

கடந்த நான்கு வருடமாக தங்க தேரானது பயன்பாட்டில்லாத தற்போதைய தங்கதேர் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற பயன்பாட்டிற்கு வந்துள்ளது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தவுடன் சுமார் 1153
திருக்கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

மேலும் திருக்கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் சுமார் 5508 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சி ஆன்மிக ஆட்சியாக அனைத்து பொதுமக்களும் பாராட்டும் அளவிற்கு திருப்பணிகள் திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

எனவும் தமிழகம் திராவிட நாடு இனிவரும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன்,
கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா,இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம்,வட்டார கல்வி குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான நெடுஞ்செழியன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் ராமச்சந்திரா பாபு மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதம்

கொணலூர் தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழா