in

முட்புதரில் கிடந்த உண்டியல் திருச்சி சமயபுரத்தில் பரபரப்பு


Watch – YouTube Click

முட்புதரில் கிடந்த உண்டியல் திருச்சி சமயபுரத்தில் பரபரப்பு

 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் முட்புதரில் கிடந்ததால் பரபரப்பு

தமிழகத்தில் உள்ள அம்மன் வழிபாட்டு தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக, திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது.

சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும்  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நிலையில் உண்டியல், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபம் பின்பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அறிந்த சமயபுரம் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. கோயில் அலுவலர்களிடம் கேட்ட போது, உண்டியல் எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. அது பழைய உண்டியலாக இருந்தாலும் முட்புதரில் கிடப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, எனக் கூறினார் .

கோவில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் போது, கடந்த ஆண்டு, ஊழியர்களே இரண்டு முறை பக்தர்கள் செலுத்திய காணிக்கை தங்கத்தை திருடியது தொடர்பாக, சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை திருடியவர்களே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதம் இருமுறை திறந்து எண்ணப்படும். அதில், ஒரு கோடிக்கு அதிகமாக பணமும், தங்கம் 3 கிலோ வரையிலும், 4 கிலோவுக்கு மேல் வெள்ளி பொருட்களும் மற்றும் அயல் நாட்டு கரன்சிகளும் கிடைக்கப் பெறும்.

கடந்த சில முறை, காணிக்கை குறைவாக இருந்தததற்கும், தற்போது, கோவில் உண்டியல் புதரில் கிடந்ததற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஐரோப்பிய செய்திகள்

ரயில் விபத்தில் 4 பேர் பலி