பிரிஸ்டனில் கருப்பின போராளி மரணம்

பிரிஸ்டனில் கருப்பின போராளி மரணம்

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வந்தவர் ராய் ஹாக்கெட். இவருக்கு வயது 93. கருப்பின போராளியாக அறியப்படும் ராய் ஹாக்கெட், தனது வாழ்நாள் முழுவதும் இனவெறிக்கு எதிராக போராடியவர்.

பிரிட்டனில் அரசு பேருந்தில் கருப்பு இனத்தவரும் ஆசியாவைச் சேர்ந்தவர்களும் டிரைவர், கண்டக்டராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 1963 ராய் ஹாக்கெட் தீரத்துடன் போராடினார். இதனால் இவரது புகழ் மூலைமுடுக்கெல்லாம் பரவியது. கருப்பின போராளி என இவரை ஒடுக்கப்பட்டவர்கள் வர்ணித்தனர்.

இந்த நிலையில் வயோதிகம் காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார். பிரிஸ்டலில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரிஸ்டல் துணை மேயர் ஆஷர் கிரைக் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ராய் ஹாக்கெட்டின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.