விநாயகர் சதுர்த்தி: பிரிட்டனில் விநாயகர் உருவம் பொறித்த தங்கக் கட்டி வெளியீடு

விநாயகர் சதுர்த்தி: பிரிட்டனில் விநாயகர் உருவம் பொறித்த தங்கக் கட்டி வெளியீடு

பிரிட்டனில் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்களின் முழுமுதற் கடவுள் என அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரிட்டன் ராயல் மின்ட் நிறுவனம் விநாயகர் உருவம் பொறித்த 24 கேரட் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது.

20 கிராம் எடை கொண்ட ஒரு தங்க கட்டி விலை 1,110.80 பவுண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இதன் விற்பனை ஆன்லைனில் தொடங்கும் என ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தை எம்மா நோபில் என்பவர் வடிவமைத்துள்ளார்.

கடந்த ஆண்டில் தீபாவளியை ஒட்டி லட்சுமி உருவம் பொறித்த தங்க நாணய த்தை ராயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த நாணயத்தையும் எம்மா நோபிலே வடிவமைத்திருந்தார்.