கனடாவில் 3-ஆம் முறையாக பிரதமர் ஆகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் 3-ஆம் முறையாக பிரதமர் ஆகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


பெரும்பான்மை கிடைக்கவில்லை

கனட பாராளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. கொரோனா 4ஆம் அலையை எதிர்கொள்ளும் அந்நாட்டில், மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 470 மில்லியன் டாலர் செலவில் தேர்தல் நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, குயிபெக் மாகாணத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் 3ஆவது முறையாக பிரதமராவது உறுதியாகியுள்ளது.
ஆனாலும், பெரும்பான்மை பெற 170 தொகுதிகள் தேவை என்பதால், தற்போது 156 இடங்களில் மட்டும் அவரது லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்,  சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 99 இடங்களிலும், குயிபெக்கோயிஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கடந்த 2019 பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதால், ஜஸ்டின் ட்ரூடோ 2-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.