ஸ்பெயின் ஆராய்ச்சி மைய இணையதள பக்கத்தை 'ஹேக்' செய்த விஷமிகள்

ஸ்பெயின் ஆராய்ச்சி மைய இணையதள பக்கத்தை 'ஹேக்' செய்த விஷமிகள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் அந்நாட்டின் தேசிய ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வகத்தின் இணையதள பக்கத்தை விஷமிகள் நேற்று திடீரென ஊடுருவினர். இதனால் இணையதள செயல்பாடு சிறிது நேரம் முடங்கியது. இதை அறிந்த விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் விஞ்ஞானிகள் போராடி நிலைமையை சரி செய்தனர். ரஷ்யாவில் இருந்து விஷமிகள் தீங்கிழைக்கும் நோக்கத்தில் இந்த நாச வேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என ஸ்பெயின் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த இணைய வழி தாக்குதலின் போது ஆய்வக ரகசியங்கள் ஏதும் திருடப்படவில்லை. இதனால் ஸ்பெயின் விஞ்ஞானிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.