உக்ரைன் அணு ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்

உக்ரைன் அணு ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்

ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா அண்மையில் உக்ரைனுக்கு சொந்தமான அணு ஆலையை ஆக்கிரமித்தது. இதனால் உக்ரைனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் அணு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு அருகே உக்ரைனும் ரஷ்யாவும் கடந்த வாரம் மாறி மாறி குண்டு மழை பொழிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அணு ஆலையை மீண்டும் உக்ரைன் வசமே ஒப்படைக்க வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த அணு ஆலை ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.