பருவநிலை மாநாட்டினால் எந்த பலனும் இல்லை

பருவநிலை மாநாட்டினால் எந்த பலனும் இல்லை

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் கவலை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த மாத இறுதியில் தொடங்கும் பருவநிலை மாநாட்டினால் எந்த பலனும் இருக்காது. வெறும் சம்பிரதாய முறைப்படி, தலைவர்கள் உரை மட்டும் நிகழ்த்துவர் என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் வருத்தம் தெரிவித்தார்.

வேல்ஸ் மாகாண இளவரசர் சார்லஸ், அமெர்டீன்ஷிர் பகுதியில் உள்ள தனது பல்மொரல் எஸ்டேட் தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரிட்டனில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி தன்னார்வலர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்களே என செய்தியாளர் கேட்டதற்கு, போராட்டக்காரர்களின் விரக்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், வெறுமனே சாலையை மறிப்பதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என ரிலாக்சாக சார்லஸ் பதிலளித்தார்.

மேலும், கிளாஸ்கோ மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்கள் வெறும் சம்பிரதாய முறைப்படி உரை மட்டுமே நிகழ்த்துவர் என்று கூறிய அவர், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.