ஆம்புலன்ஸ் விமான விமானியாக பணியாற்றிய நாள்களை

ஆம்புலன்ஸ் விமான விமானியாக பணியாற்றிய நாள்களை

நெகிழ்ச்சியுடன் மனம்திறந்த இளவரசர் வில்லியம்

இளவரசி டயானாவின் மகனும் கேம்பிரிட்ஜ் மாகாண இளவரசருமான வில்லியம் கடந்த 2015 முதல் 2017 வரை ஆம்புலன்ஸ் விமானத்தில் விமான ஓட்டியாக பணியாற்றினார். அப்போது அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து முதல்முறையாக செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில் விமான ஓட்டியாக வேலை பார்த்த நாள்களில் பொதுமக்களின் வேதனையையும் வலியையும் சுமந்துகொண்டு வீட்டுக்குச் செல்வேன். அந்தப் பணியில் எனக்கு மனநிறைவு ஏற்பட்டாலும் அந்தப் பணி என்னை பித்துப்பிடித்தவனாக மாற்றியது என்றார்.
மேலும் தனது தாயார் டயானா குறித்தும் அப்போது அவர் உருக்கமாக பேசினார்.