ஐரோப்பிய நாடுகளுக்கு போப் கண்டனம்

ஐரோப்பிய நாடுகளுக்கு போப் கண்டனம்

கிரேக்க தீவான லெஸ்போசில் அகதிகளை சந்தித்த போப் பிரான்சிஸ் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார். பின்னர் அகதிகளை சுயநலம் மற்றும் தேசியவாதம் என்ற பெயரில் அரசியல் பிரகடனத்துக்காக ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அகதிகளை தடுக்க நாட்டின் எல்லையில் சுவர் கட்டுவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அகதிகளை மனமுவந்து ஏற்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.