நடுவானில் திறந்த விமானத்தின் கதவு

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு

அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்

பிரிட்டனின் பைஃப் கிங்லஸ்ஸி பகுதியில் நேற்று சிறு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் இறங்குமிடம் அருகே வந்தபோது நடுவானில் விமானி அறையின் கதவு திடீரென திறந்தது. இதனால் அந்த விமானம் பொத்தென ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளியில் வேகமாக விழுந்தது.

இந்த ஓசையை கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு ஓடி வந்து பார்த்தனர். இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமானியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.