ஜப்பான் கடற்பகுதியில் ஏவுகணை ஏவிய வடகொரியா

ஜப்பான் கடற்பகுதியில் ஏவுகணை ஏவிய வடகொரியா

வடகொரியா கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அமெரிக்காவையே பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில், அண்டை நாடான ஜப்பானின் கடற்பகுதியில் சமீபத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி, பரிசோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஜனவரியில் இதேபோன்ற ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா, இது உலகின் மிக பலம்வாய்ந்த ஆயுதம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.