பிரிட்டனில் புதியவகை மருந்துக்கு ஒப்புதல்

பிரிட்டனில் புதியவகை மருந்துக்கு ஒப்புதல்

பிரிட்டனில் கொரோனாவுக்கு எதிரான போரில் சொட்ரோவிமாப் என்ற புதியவகை மருந்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஊசி மூலம் நரம்பு வாயிலாக செலுத்தப்படும் இந்த மருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக திறம்பட செயல்படுவது ஆரம்பகட்ட பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலவீனமானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் இறப்பதையும் இந்த மருந்து 79 சதவீதம் குறைப்பதாக விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.