வெளிநாட்டு பயணிகளுக்கு நியூசிலாந்து அனுமதி

வெளிநாட்டு பயணிகளுக்கு நியூசிலாந்து அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூசிலாந்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கு கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கிய போதிலும் பொது முடக்கத்தில் தளர்வு ஏற்படுத்தப்படவில்லை.

குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறைகளை நியூசிலாந்து அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி சுற்றுலா விசா, மாணவர் விசாவை பயன்படுத்தி வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்து வருவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.