அமைச்சருக்கு இரண்டு என்றாலே பிரச்சினை தான்!

அமைச்சருக்கு இரண்டு என்றாலே பிரச்சினை தான்!

தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு கைகளிலும் வாட்ச் அணியும் பழக்கம் கொண்டவர். இதனாலேயே இவரை டபுள் வாட்ச் டக்ளஸ் என இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

இரண்டு வாட்ச் அணியும் பழக்கம் கொண்டவர் என்ற அடிப்படையில் தான் என்னவோ, அவர் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விமானத்தில் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், இதை ஏற்க மறுத்த உதவி ஆய்வாளர், 2 லேப்டாப்களை எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதி மறுத்தார்.
அதற்குள் இந்த விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு ஓசிவந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டனர். அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யும் மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் 2 லேப்டாப்களுடன் பயணிக்க அமைச்சரை அவர்கள் அனுமதித்தனர். அமைச்சருக்கு எதிலும் 2 தான் போலும் என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.