ஈராக்கில் வெயில் காரணமாக நேற்று பொது விடுமுறை

ஈராக்கில் வெயில் காரணமாக நேற்று பொது விடுமுறை

ஈராக்கில் கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக நேற்று 50 டிகிரி  செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்பட்டது இதனால் பொதுமக்கள் வெளியில் தலை காட்டவே அஞ்சுகின்றனர். வெயில் காரணமாக 10 மாகாணங்களில் பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஈராக்கை பொருத்தவரை வெப்பம் அதிகம் உள்ள நாடாக இருந்தாலும், தற்போது கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.