மெருகூட்டப்படும் இந்தியாவின் முதல் மசூதி

மெருகூட்டப்படும் இந்தியாவின் முதல் மசூதி

சேர நாட்டை ஆண்டுவந்த சேரமான் பெருமாள், அரேபிய நாட்டுக்கு சென்று முஸ்லிம்களின் இறைதூதரான முகமது நபியை நேரில் சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர், நபி தோழரான மாலிக் தின் தினார் மூலம் கி.பி. 629ஆம் ஆண்டில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் மசூதி கட்டினார். இந்த மசூதிதான் இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் மசூதி ஆகும்.

இந்த மசூதியில் பழைமை மாறாமல் அப்படியே புதுப்பொலிவு ஏற்படுத்தும் வகையில், கடந்த 30 மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பணி முடிவடையில் தறுவாயில் இருப்பதாக கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், மசூதியின் வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இஸ்லாமிய பாரம்பரிய அருங்காட்சியகமும் ஏற்படுத்தப்படவுள்ளது.