அதலபாதாளத்தில் இந்திய பொருளாதாரம்

அதலபாதாளத்தில் இந்திய பொருளாதாரம்

அபிஜித் பானர்ஜி பேச்சு

குஜராத்தில் உள்ள ஆமதாபாத் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா காணொளி முறையில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவிலிருந்து காணொளி வாயிலாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேசினார்.

அப்போது இந்தியாவில் பொருளாதாரம் கடந்த 2019 ஆம் ஆண்டை விட மிகவும் மோசமாக அதலபாதாளத்தில் உள்ளது. இந்திய மக்கள் துன்பமான நேரத்தில் உள்ளனர். இந்திய பொருளாதாரம் எவ்வளவு அடிமட்டத்தில் உள்ளது என்பது நமக்கு தெரியாது. இதற்காக நான் யாரையும் குறை கூறவில்லை. எனது கருத்தை மட்டுமே தெரிவிக்கிறேன்.

மாணவர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கான தைரியத்தை பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட படிப்பு அல்லது பயிற்சியை விட சிந்தனை மிகுந்த, வெளிப்படையான மனதுடன் மனிதனாக இருப்பதே சிறந்தது என்று அபிஜித் பானர்ஜி பேசினார்.