இந்திய ராணுவத்தில் 97 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் 97 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

விமான பணியாளர், மாலுமி, இளநிலை அதிகாரி என இந்திய ராணுவத்தில் 97 ஆயிரத்து 177 காலி பணியிடங்களும், கடற்படையில் 11,166 காலி பணியிடங்களும், விமானப்படையில் 4,850 காலிப்பணியிடங்களும் இருப்பதாக மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ராணுவத்தில் 7476 அதிகாரிகள் காலிப்பணியிடங்கள், கடற்படையில் 1265 காலி பணியிடங்களும், விமானப்படையில் 621 காலி பணியிடங்கள் உள்ளன.

இது தவிர விமான பணியாளர், மாலுமி, இளநிலை அதிகாரி என இந்திய ராணுவத்தில் 97 ஆயிரத்து 177 காலி பணியிடங்களும், கடற்படையில் 11,166 காலி பணியிடங்களும், விமானப்படையில் 4,850 காலிப்பணியிடங்களும் இருப்பதாக அவர் கூறினார்.