சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா

சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில்

தற்போது சுகாதார காப்பீட்டு பிரீமியம் மீது 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் சுகாதார காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரட் அளித்த பதிலில், தற்போது அதற்கான எந்த ஒரு தீர்மானமும் ஜிஎஸ்டி கவுன்சில் முன்பாக இல்லை. மேலும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான எந்த ஒரு பரிந்துரையும் ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்று அவர் கூறினார்.