பிரான்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலியா விளக்கம்

தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்ட, ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை அளிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் ஆகஸ் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலை அளிக்க ஒப்பந்தம் செய்து கொண்ட பிரான்ஸ், இந்த ஒப்பந்தத்தால் கடும் அதிருப்தி அடைந்தது. மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கள் தூதர்களையும் திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை தாங்கள் முறித்துக் கொண்டது குறித்து அந்நாடு முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.