பிரதமர் தேர்தலில் லிஸ் டிரசுக்கு முன்னாள் அமைச்சர் சஜித் ஜாவீத் ஆதரவு

பிரதமர் தேர்தலில் லிஸ் டிரசுக்கு  முன்னாள் அமைச்சர் சஜித் ஜாவீத் ஆதரவு

பிரிட்டன் பிரதமர் பதவிக்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரிட்டன் பிரதமர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ரிஷி சுனக்,  தான் பிரதமரானால் மருத்துவத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவேன் என உறுதி அளித்துள்ளார்.

மறுமுனையில் லிஸ் டிரஸ் கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பள்ளிகளில் முதல் நிலை கிரேடு பெறும் மாணவர்கள் ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவர் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத், லிஸ் டிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரிட்டனின் எதிர்கால சவால்களை லிஸ் டிரசால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று கூறிய சஜித் ஜாவீத், ரிஷி சுனக்கின் வரிகுறைப்பு வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார்.