ஜெர்மனியில் வெடி மருந்து சேமிப்புக் கிடங்கில் வெடி விபத்து

ஜெர்மனியில் வெடி மருந்து சேமிப்புக் கிடங்கில் வெடி விபத்து

காட்டுத்தீ பரவியதால் பரபரப்பு

ஜெர்மனி தலைநகர் பெர்லின் மேற்கு பகுதியில் குருன்வல்டு காடு அமைந்துள்ளது. இங்கு வெடிபொருள்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சேமிப்பு கடையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆயுதங்கள் தீ பற்றி எரிந்தன. மேலும் சேமிப்புக் கிடங்கில் பற்றிய தீ காடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியே கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு பனைமர உயரத்திற்கு தீப்பிளம்பாக காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 140 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சேதமடைந்த ஆயுதங்களின் மதிப்பு குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் பொக்கிஷம் போல பாதுகாத்த பல்வேறு ஆயுதங்கள் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.