உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை மறைவு

உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை மறைவு

உலகின் மிகவும் வயதான கிரிக்கெட் வீராங்கனை எய்லின் ஆஷ் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 110. 1937ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் பெண் அணியில் இடம்பெற்ற அவர் 7 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கிறார். 1949ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்றார்.
எய்லின் ஆஷ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கிரிக்கெட் விளையாட்டின் முன்னோடி என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிறேல் கனோர் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.