இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை தாக்கும்

இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை தாக்கும்

ஐஐடி விஞ்ஞானி எச்சரிக்கை

கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பரவ வாய்ப்பு உள்ளதாக கான்பூர் ஐஐடி விஞ்ஞானி மணீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது

ஓமிக்ரோன் பரவலின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனாலும் டெல்டா வகை வைரஸின் தீவிரம் ஒமிக்ரானில் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை மிதமாகவே இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அங்கு அந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அந்நாட்டில் வைரஸ் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் புள்ளி விவரங்கள் கிடைப்பது தெளிவான கண்ணோட்டம் பெற உதவும் என்று அவர் கூறினார்.