தலை ஒட்டிப் பிறந்த 2 சிறுவர்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

தலை ஒட்டிப் பிறந்த 2 சிறுவர்களுக்கு  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்த மூன்று வயது சிறுவர்கள் பெர்னார்டோ, ஆர்தர் லிமா. இருவரும் தலை ஒட்டி பிறந்த இரட்டையர்கள். வயது செல்ல செல்ல சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த பெற்றோர், சிறுவர்களின் தலையை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்தனர். இதற்காக லண்டன் கிரேட்ஸ் ஆர்மி ஸ்ட்ரீட்டில் உள்ள மருத்துவமனையை அவர்கள் நாடினர்.

இங்குள்ள மருத்துவர்கள் பிரேசிலில் இதுபோன்ற அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த மருத்துவர்களிடம் சிறுவர்களை பரிந்துரை செய்தனர். லண்டன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பிரேசில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுவர்களின் தலையை வெற்றிகரமாக பிரித்தனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.