கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது

கர்நாடகத்தில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது அமைச்சரவையில் 29 பேருக்கு வாய்ப்பு அளித்தார்.

34 பேர் அமைச்சராக இருக்கவேண்டிய அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து இப்போது 30 அமைச்சர்கள் இருக்கின்றனர். இதனால் காலியாக இருக்கும் நான்கு அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற பாஜகவின் மூத்த எம்எல்ஏக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

அதேசமயம் காங்கிரஸ், மஜத கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் தரப்பட்டு இருப்பதால், பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் அமைச்சரவையை துரிதமாக விரிவாக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை பாஜகவின் மூத்த எம்எல்ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டசபையின் கூட்டத்தொடர் டிசம்பர் 24ஆம் தேதி முடிவடைந்த பின்னர், பாஜக மேலிடத்திடம் ஆலோசனை நடத்தி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முதல் அமைச்சர் பசவராஜ் உண்மை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.