தோல்வியில் இருந்து மீள்வோம்

தோல்வியில் இருந்து மீள்வோம்

ஜடேஜா சபதம்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று சூளுரைத்தார். மேலும், பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டு பிடிக்க வேண்டும்.
ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர். அவருக்கு நம்பிக்கை அளித்தால் சிறப்பாக செயல்படுவார். சிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவரை சிறந்த மனநிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்று நான் கருதுகிறேன் என ஜடேஜா கூறினார்.